காலி முகத்திடலில் ‘கோட்டா கோ கம’ முதலாவது குடிலை ஐக்கிய தேசியக் கட்சியின் ஆஷு மாரசிங்கவினால் அமைக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்து அரகலயவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காலி முகத்திடலில் உள்ள அரகலய இடத்தை அகற்ற வேண்டாம் என அப்போதைய பிரதமர் விக்ரமசிங்க கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரகலயவை தாக்க ஆரம்பித்தார் என்றார்.