ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்த பின் வீட்டு நாயையும் வெட்டிய கொடூரம் !

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை வெட்டி படுகொலை செய்தவர்கள் வீட்டில் நின்ற நாய் ஒன்றினையும் வெட்டி காயப்படுத்தியுள்ளனர்.

நெடுந்தீவு இறங்கு துறைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்றைய தினம் சனிக்கிழமை ஐந்து முதியவர்கள் வெட்டுகாயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டனர். ஒரு முதியவர் காயங்களுடன் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வீட்டில் நின்ற அவர்களின் வளர்ப்பு நாய் கழுத்தில் வெட்டு காயத்துடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நாய் பயத்தினால் வீட்டின் ஒரு மூளையில் சுருண்டு படுத்துள்ளதுடன், அதன் கண்களில் மிரட்சியும் தெரிகிறது.

நாய் தனது எஜமானர்களை காப்பாற்ற போராடிய போது நாய் மீது கொலையாளிகள் தாக்குதல் நடத்தி வெட்டி காயமேற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அதேவேளை கொலையான ஒருவரின் அடையாள அட்டை வீட்டின் வெளியே காணிக்குள் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் , திறப்பு ஒன்றும் வெளியில் வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

இதே நேரம் நெடுந்தீவில் வயோதிபர்கள் ஐவரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தப்பி சென்று புங்குடுதீவில் தலைமறைவாகியிருந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது பற்றிய மேலதிக தகவல்களை அறிய ..,
https://www.thesamnet.co.uk//?p=95872
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *