நெடுந்தீவு படுகொலைகளின் சூத்திரதாரி யார்..? – வெளியாகியுள்ள படம் !

இலங்கையின் வட பகுதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஐந்து சிரேஷ்ட பிரஜைகளின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் நெடுந்தீவு இளைஞர்களால் வெளியிட்டப்பட்டு வருகின்றது. குறித்த சந்தேகநபர் நெடுந்தீவு பகுதியை சேர்ந்த ச.ரகுநாதன் என்பவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய கொலைச் சம்பவத்தை அடுத்து புங்குடுதீவு பெருங்காட்டிலுள்ள ஒரு வீட்டில் இவர் தங்கிநிற்பதை உறுதிப்படுத்திக்கொண்ட   இளைஞர்கள் குழு ஒன்று அவ்வீட்டினை சுற்றிவளைத்ததோடு பொலிசாரை அங்குவரவழைத்துள்ளார்கள். பின்னரேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே நேரம் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான வயோதிப பெண்மணிக்கு கடும் காயங்களை விளைவித்து, கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நபரை 48 மணிநேர காவல்துறை காவலில் வைத்து விசாரணை செய்ய ஊர்காவற்துறை நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *