பாடசாலை மாணவனின் நிர்வாணக் காட்சிகளைப் பெற முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் சீதுவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதகரை இம்மாதம் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மிகொமுவ பதில் நீதவான் நெல்சன் குமாரநாயக்க கடந்த 23ஆம் திகதி உத்தரவிட்டார்.
சீதுவ லியனகேமுல்ல மெதடிஸ்த தேவாலயத்தின் பிரதான போதகர் ஜெரோம் வன்னிய பண்டார இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
15 வயதுடைய பாடசாலை மாணவனை வட்ஸ்அப் ஊடாக நிர்வாண காணொளி அழைப்புகளை மேற்கொள்ளுமாறு போதகர் பலமுறை கோரிக்கை விடுத்ததாக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.