தங்கம் கடத்திய குற்றச்சாட்டின் பேரில் அபராதம் விதிக்கப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வியாழக்கிழமை (25) இரவு டுபாய் சென்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன .
நாடாளுமன்ற உறுப்பினர் இரவு 8 மணியளவில் டுபாய் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் வி.ஐ.பி பிரமுகருக்கான வழியாக நாட்டை விட்டு வெளியேறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (23) டுபாய் விமானத்தில் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினரை சுங்க அதிகாரிகள் பிரமுகர் ஓய்வறையில் வைத்து சோதனையிட்டவேளை 3.5 கிலோ தங்கம் மற்றும் 91 ஸ்மார்ட்போன்கள் அடங்கிய ரூபா 70 மில்லியன் பொருட்களுடன் பிடிபட்டார். பின்னர் அதே நாளில், அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.அத்துடன் 7.5 மில்லியன் பெறுமதியான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.