யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள 6க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ சொரூபங்களை இன்று இனம் தெரியாத கும்பலொன்று சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக 2 இடங்களில் முழுமையாகவும், இரண்டு இடங்களில் பகுதியளவிலும் ஏனைய இடங்களில் சொரூபங்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் கூடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் வேலணை மத்திய கல்லூரியில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அதிபர் ஒருவரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்களை தெருவுக்கு இறக்கி போராடி மாணவர்கள் மத்தியில் மதவாத சிந்தனைகளை திணிப்பது போல நடந்து கொண்டிருந்தமையம் கவனத்தில் கொள்ளத்தக்கது.