‘அரந்தலாவ கொலைகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை’ – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgஅரந்தலா வையில் பெளத்த பிக்குகளும் சிவிலியன்களும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தனக்கும் தொடர்பில்லையென பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கண்டிக்கு நேற்று விஜயம் செய்த பிரதியமைச்சர் முரளிதரன், அஸ்கிரிய, மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேசும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

‘அரந்தலாவ பெளத்த குருக்கள் மற்றும் அப்பிரதேச சிவிலியன்கள் ஆகியோர்களினது கொலைச் சம்பவத்திற்கும் எனக்கும் எவ்வித தொடர்புமில்லை. நான் அப்போது யாழ்ப்பாணத்தில் பிரபாகரனோடு செயலாற்றி வந்தேன்.’ ‘பொட்டு அம்மான், நியூட்டன், குமாரப்பா போன்றோரே இதனைச் செய்தனர்.

இந்த விடயம் இராணுவத்தினருக்கும் நன்கு தெரியும். வீணாக என்மீது பழி சுமத்தப்படுகிறது’ என்றும் அவர் தெரிவித்தார். பிரதி அமைச்சர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில் :-

1,63,000 பேர் அகதிகள் தற்போது அவர்களினது சொந்த இடங்களுக்கு மீள்குடியமர்த்தப் பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்யப் பட்டுள்ளன. எனினும் இவர்கள் நிரந்தரமான இயல்பு வாழ்க்கை யைப் பெறுவதற்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடியிருப்பு கள், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்தும் செய்துதர வேண்டும். ஆகவே இதற்காக சகல அமைச்சர்களிடமும் கலந்தாலோசித்து துரித நடவடிக்கை களை மேற்கொள்ளவுள்ளேன்.

அகதிகளாகவும் அநாதை களாகவும் உள்ள மக்களின் வாழ்வாதார சுபீட்சத்திற்காக தமிழ், முஸ்லிம், சிங்களமென்ற வேறு பாடின்றி பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நான் சமமான சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினதும் அரசாங்கத் தினதும் அமைச்சுகளினதும் உதவி கள் கிட்டும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 Comment

  • பல்லி
    பல்லி

    ஜயோ ஜயோ;;அவன் நானில்லை நானில்லை;
    அது தளபதி கருனா அம்மானாய் இருக்கலாம்; நான் இப்போ மாண்புமிகு அமைச்சர் முரளிதரானாக்கும்: முள்ளிவாய்க்காலுடன் போகவேண்டிய நான் எப்படியோ தப்பி பிழைத்து ஒரு பிரதியமைச்சர் ஆனது பொறுக்காத ஒருசிலரின் செயல்பாடே என் பளய நினைவுகளை புதிய கவிதைகளாக அரங்கேற்றுவது, நான் எனக்கு தெரிந்த தெரியாத சகல உன்மைகளையும் ஒன்றும் விடாமல் (அம்மான் அல்லவா) மகிந்தா குடும்பத்திடம் சொல்லி விட்டேன் என்பது என்மீது குற்றம் சொல்பவர்களுக்கு தெரியாது போல் உள்ளது; சும்மா விடுங்கப்பா என்னை நான் மக்களுக்கு தொண்டு (தொல்லை) செய்யவே புது பிறவியாய் அமைச்சராய் உங்கள் முன் வந்துள்ளேன், இதுவே அம்மான் நிலை இன்று;

    Reply