ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ நேற்று மாலை பாராளு மன்றத்துக்கு விஜயம் செய்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை மீதான விவாதம் மற்றும் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் ஆகியன நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
பாராளுமன்றத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்குள்ள ஜனாதிபதியின் அலுவலகத்தில் அமர்ந்து மேற்படி விவாதங்களைச் செவிமடுத்தார். ஜனாதிபதி பாராளுமன்றத் துக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்ததையடுத்து நேற்றிரவும் பெருமளவிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்