கொரோனா நிவாரண நிதிக்காக காத்திருந்து கிடைக்காததால் ஏமாற்றமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் !

வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்துள்ளமையினால் மக்களின் முகபாவத்தினை வைத்தே அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை என்னால் அறிந்துகொள்ள முடியுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா- மணிபுரத்தில் இடம்பெற்ற சந்தை கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் கு.திலீபன் மேலும் கூறியுள்ளதாவது,

Image result for கு.திலீபன்

“மக்கள் நலன் சார்ந்த பல திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து செல்கின்றபோதிலும் பல இடர்பாடுகளை சந்தித்த வண்ணமே உள்ளது.

இதற்கு காரணம், இந்த அரசாங்கம் மற்றும் அரசாங்கத்தினைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிரந்தரமாக அந்த ஆசனத்தில் இருந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அவதூறுகளை சிலர் பரப்பி வருகின்றனர். ஆனால் இத்தகைய அவதூறுகளினால் அரசாங்கத்திற்கு எந்ததொரு பாதிப்பும் ஏற்படாது.

இதேவேளை வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.

கொரோனா தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில் நிவாரணம் வழங்கியிருந்தார்கள். அப்போது எனது குடும்பத்தின் பதிவு வவுனியா பிரமனாளங்குளத்தில் இருந்தது.

அந்த கிராமத்தில் பாதிரியார் ஒருவர் நிவாரண பொதி வழங்குகின்றார் என தகவல் கிடைத்து நானும் எனது மனைவியும் மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றோம்.

அந்த பொதிகளை பார்த்தபோது பெரிய பொதியாக இருந்தது. அதனால் நானும் மனைவியும் சென்ற மோட்டார் சைக்கிளில் இந்த பொதியை கொண்டு செல்ல முடியாது இருக்கும் என எண்ணிக்கொண்டே நிவாரணம் கிடைக்கும் என அருகில் சென்ற எமக்கு அது கிடைக்கவில்லை.

பிரமனாளங்குளத்தில் பதிவு இருந்தாலும் வவுனியா நகரில் இருக்கின்றமையால் பொதியை தரமுடியாது என கிராம சேவகர் தெரிவித்துவிட்டார். எனினும் நான் முரண்படவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பி வந்தோம். வறுமையையும் கஸ்டங்களையும் சந்தித்தே நான் இந்த நிலைக்கு வந்திருந்தேன்.

ஆகவே மக்களின் முகபாவத்தினை வைத்தே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை நான் அறிந்துகொள்வேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *