பிரதமர் மகிந்த ராஜபக்சவை அரசாங்கம் சிறிதளவு கூட மதிக்கவில்லை எனவும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்கள் குறித்த பிரதமரின் சமீபத்தைய அறிக்கையை ஏற்றுக்கொள்ளாததன் மூலம் அவரை அரசாங்கம் அவமானப்படுத்தியுள்ளது எனவும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஜனசாக்கள் எரிப்பு தொடர்பாக குறிப்பிடும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,
அரசாங்கத்திற்குள் காணப்படும் சிறிய குழுவினர் பிரதமரை அவமதிப்பது அவரது அறிக்கைகளை புறக்கணிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தங்களின் நடவடிக்கைள் மூலம் பிரதமரை அவமரியாதை செய்கின்றனர் இந்த மோதல் அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றவில்லை என்பதை காண்பிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.