வன்னி யிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு கிழக்கு மாகாணத்தில் சேகரிக்கப்பட்ட உலர்உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் ஒரு தொகுதியை இன்று செவ்வாய்க்கிழமை வவுனியா அரச அதிபர் ஊடாக கிழக்கு மாகாணமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கையளிக்கவிருக்கிறார்.
இதற்காக வவுனியா சென்றுள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வவுனியா மாவட்டச் செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபரைச் சந்திப்பதுடன் நலன்புரி முகாமுக்கும் விஜயம் செய்து வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்து தங்கியுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரணப்பொருட்களைக் கையளிப்பார் என்று முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
கையளிக்கப்படவிருக்கும் முதலாவது தொகுதி உலர்உணவு நிவாரணம் சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியானது. இடம்பெயர்ந்து வரும் வன்னி மக்களுக்கு வழங்குவதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் அமைப்புகள், ரி.எம். வி.பி. கிளைகள் மூலம் முதலமைச்சரின் வழிகாட்டலில் உலர் உணவுப்பொருட்கள் வீடுவீடாகச்சென்று சேகரிக்கப்பட்டு வந்தன. அவற்றின் ஒரு தொகுதியே இன்று வவுனியாவில் கையளிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
msri
பிள்ளையான் இப்பிடி வேலைகளை செய்யிறதாலைதான் > கருணா முட்டாள் என்கின்றாரோ?
ello
நான் ஒரு யாழ்பாணி தம்பி பிள்ளையான் நீர் ஒரு ரோசத் தமிழன். தமிழ் தேசிய கூத்தமைப்பை விடவும் உமது சேவை சிறந்தது. 22 கூத்தமைப்பிலை எவர் சனதுக்கு உதவினர் என்டால் எவரும் இல்லை. இது எல்லாம் தமிழரின் தலைவிதி.
santhanam
தமிழரின் உரிமையின் பெயரில் இலங்கை இந்தியா நோர்வே முதல் எல்லோரும் கூடி ஒரு இரகசிய சதியை இந்தியாவில் வைத்து தொடங்கியுள்ளனர். இந்த வகையில் போரட்டத்தை அழிப்பைத் தொடர்ந்து ஒரு திடீர் தீர்வு தமிழருக்கு கொடுக்கப்படும. தமிழ் …குழுவின் அரசியல் இதன் மூலம் மீளமைக்கப்பட்டு, பெரும்பான்மை தமிழ் சமூகத்தை இதனூடாக புலிக்கு எதிரான ஒரு கருத்தியலாக கட்டமைக்கப்படும்.
palli
மக்களுக்கு நல்லது செய்தால் பிரபாகரனுக்கு மட்டுமல்ல. அவரது தத்து பிள்ளை கருனாவுக்கும் பிடிக்காது. அந்தவகையில் பிள்ளையான் அவருடன் செயல் ஆற்றும் மேயர் மற்றும் உறுப்பினர்க்கு கருனா மிக விரைவில் ஆனந்த பரிசு கொடுக்க போவதாக கிழக்கு செய்தி. பிள்ளையான் நீரும் கெட்டவந்தான் இருப்பினும் உமது மனிதாமானத்துக்கு பல்லியின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.