363 ரூபாயினால் அதிகரித்த எரிவாயு கொள்கலன்களின் விலை !

லாப்ஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, லாப்ஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும்  5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 856 ரூபாயாகவும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே நேரம் “சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு கொள்கலன்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க நேற்றையதினம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *