“நீங்கள் மூக்கையும் வாயையும் மூடும் வரை ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.” – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து ஊரடங்கு நிலை அறிவிக்கப்பட்டது. இம்மாதம் 30ஆம்திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த ஊரடங்கு அடுத்த மாதம் 06ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் கூட மக்கள் வெளியு வருவது குறைந்ததாக தெரியவில்லை. வழமையான நாட்களை போல மக்கள் தெருக்களில் உலவித்திரிகின்றனர்.

இந்தநிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே  “ நாடு மூடப்பட்டாலும், மக்கள் மூக்கையும் வாயையும் மூடாமல் இருந்தால், ஒரு மீட்டர் தூரத்தை வைத்துக்கொண்டு இருக்காமல், தேவையில்லாமல் நெரிசலான இடங்களுக்குச் சென்றால் வைரஸ் பரவலை நிறுத்த முடியாது” என தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர் ,

மக்கள் சரியான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றவில்லை என்றால், நாடு மூடப்பட்டிருந்தாலும் கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்படாது. நாடு மூடப்பட்டிருந்தாலும், மக்கள் தேவையில்லாத இடங்களில் அலைந்து திரிந்தால், கொரோனா பரவுவது மேலும் அதிகரிக்கும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.

இது வாழ்க்கையுடனான ஒரு ஒப்பந்தம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் டெல்டா வகையை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட வேண்டியது அவசியம். இதுவரை தடுப்பூசி போடப்படாத நபர்கள் இருந்தால், அருகில் உள்ள தடுப்பூசி மையத்திற்குச் சென்று தடுப்பூசியை எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பிடித்த வகை தடுப்பூசியை தேடாதீர்கள். ” எனவும் அவர் ரெிவித்துள்ளார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *