வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்லவுள்ள இலங்கை தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாடுகளுக்கு பொருத்தமான தடுப்பூசிகளை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்கிழமை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் பணியகத்திற்கு செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முன் பதிவு செய்ய வேண்டும்.
இந்த தடுப்பூசி நடவடிக்கைகள் நாரஹேன்பிட்டியில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும். அதற்காக ஒரு குறிப்பிட்ட திகதி மற்றும் நேரம் குறுந்தகவல் மூலம் அறிவிக்கப்படும்.
இதுவரையிலும் 30,000 -க்கும் மேற்பட்டோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 12,000 -க்கும் மேற்பட்டோருக்கு பொருத்தமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு வேலைக்கு செல்ல எதிர்பார்த்திருக்கும் தொழிலாளர்கள் ஏதாவது சந்தேகங்கள் இருப்பின், 24 மணிநேர சேவையில் உள்ள 1989 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புகொண்டு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.