அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கை தொடர்ந்து முன்கொண்டு செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மன்றுக்கு அறிவிக்கப்பட்டமைக்கு அமைய, பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்ட நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
திவிநெகும திணைக்களத்தின் நிதியை முறையற்ற வகையில் கையாண்டமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.