“அவசர உதவியை வழங்க தயாராகவுள்ளோம்.”- உலக வங்கி அறிவிப்பு !

இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத வகையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு அவசரகால உதவிகளை வழங்கவும் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாக்கவும் தயாராக இருப்பதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் கூறியுள்ளார்.

இலங்கை அரசாங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், இச்சந்திப்பு சிறப்பான ஒன்றாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை அரசாங்க பிரதிநிதிகள் அமெரிக்காவிற்கு பயணமாகியுள்ளனர்.

இவ்வாறு பயணமாகியுள்ள நிதியமைச்சர் அலி சப்ரி மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருடன் வொஷிங்டனில் பேச்சுவார்த்தை நடத்தியதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும், இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏழைகள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் மீதான நெருக்கடியின் தாக்கங்கள் குறித்து உலக வங்கி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது என ஹார்ட்விக் ஷாஃபர் கூறியுள்ளார்.

அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சுகாதாரம் தொடர்பான பொருட்கள், போஷாக்கு மற்றும் கல்விக்கு அவசர உதவியை வழங்க உலக வங்கி தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *