இலங்கையில் அதிகரித்த மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு – கரம் கொடுக்கும் ஜப்பான் !

பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக் குறையில் காணப்படும் நிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஜப்பானிய  அரசாங்கம் யுனிசெஃப் மூலம் இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குகிறது.

1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் யுனிசெஃபால் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கான மருந்துகளை வழங்கப்படவுள்ளது, அவர்களில் 53,000 கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஏறக்குறைய 122,000 குழந்தைகள் உடனடித் தேவையுள்ளவர்களாக உள்ளனர். சுகாதார அமைச்சுடன் இணைந்து இலங்கை முழுவதும் உள்ள சுகாதார நிலையங்களுக்கு இந்த மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளன.

இலங்கைக்கான ஜப்பானின் இடைக்கால பொறுப்பாளர் திரு.கட்சுகி கோட்டாரோ, “இலங்கை மக்களுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் 25 வகையான மருந்துகளை வாங்குவதற்கு ஜப்பான் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர உதவியை வழங்குவது எங்களுக்கு பெருமையாகும். UNICEF மூலம் அடுத்த இரண்டு மாதங்களில், பொருளாதார நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய சாத்தியமுள்ள கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அத்தியாவசிய உயிர்காக்கும் மருத்துவ சேவைகளை வழங்க உதவும் என்று நாம் நம்புகின்றோம்.

பொருளாதார நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெளிநாட்டு நாணய தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் மற்றும் சமையலுக்கு தேவையான எரிவாயு, மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் இலங்கை சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

 

அத்தியாவசிய சேவைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சுகாதாரத் துறையானது, நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இருவரையும் பாதிக்கிறது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான அடுத்த இரண்டு மாதங்களில் முடிவடையும் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை சுகாதார அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

“இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய, குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கான இந்த உயிர்காக்கும் மருந்துகளின் தேவையைக் கருத்தில் கொண்டு விரைவில் செயற்பட வேண்டிய தருணமாகும். ஜப்பான் அரசாங்கத்தின் விரைவான இப் பங்களிப்பு பாராட்டுக்குரியது. யுனிசெஃப் தனது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி மருந்துகளை விரைவாகக் கொள்வனவு செய்து, அவை மிகவும் அவசியமாகவுள்ள இடங்களுக்கு வழங்கும்” என்று யுனிசெஃபிற்கான இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் தெரிவித்தார்.

வறுமை மற்றும் கோவிட்-19 காரணமாக இலங்கையில் பல குழந்தைகளுக்கு ஏற்கனவே ஒரு கடினமான சூழ்நிலை காணப்பட்டது, அதனை தற்போதைய நெருக்கடி மேலும் மோசமாக்குகிறது. ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்புகளான, போஷாக்கு, நீர், சுத்தம் மற்றும் சுகாதாரம் (WASH), கல்வி மற்றும் பாதுகாப்பு சேவைகள் உட்பட, குழந்தைகளின் வளர்ந்து வரும் தேவைகளை உடனடியாக மட்டுமல்லாது, நீண்ட காலத்திலும் பூர்த்தி செய்வதற்கு மிகவும் அவசியமானதாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *