ஜே.வி.பி அனுரகுமாரவை சந்தித்த கோட்டாகோகம போராட்டக்காரர்கள் – ரணில் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பில் திட்டம் ?

நேற்றைய தினம் (17 ஆம் திகதி) காலிமுகத்திடல் போராட்டகள பிரதிநிதிகளுக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

ஜூலை 20 ஆம் திகதி ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், காலி முகத்திடல் போராடத்தின் முதல் இரு நிபந்தனைகளில் இரண்டாவது நிபந்தனை ரணில் விக்ரமசிங்க பதவி விலக வேண்டும் என்பதே, எனவே ஜனாதிபதி பதவிக்கான தேர்தலுக்கு முன் எமது கோரிக்கைகளை எதிர்கட்சிகளுக்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

அந்தவகையில் ஜே.வி.பி பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினோம் என காலி முகத்திடல் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்ற நிலையில் அவருக்கு எம்.பிகள் ஆதரவளிக்க கூடாது என்பதை அரசியல் கட்சிகளுக்கு தெரியப்படுத்தவே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதே நேரம் கோட்டாபய அரசுக்கு எதிராக இளைஞர்களையும் தொழிற்சங்கங்களையும் தூண்டி போராட்டத்தை நடாத்துவது இடதுசாரிய கட்சிகள் தான் என குற்றச்சாட்டப்பட்டு வரும் நிலையில் இன்னும் ஒரு தரப்பினர் ரணில் ஆட்சியை பிடிக்கவே இந்த போராட்டங்கள் திட்டமிடப்பட்டதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *