சூடு பிடிக்கும் ரணிலின் அரசியல் நகர்வுகள் – எரிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புதுப்பிக்க ரணில் நடவடிக்கை!

இடைக்கால அரசாங்கத்துக்கான ஜனாதிபதி தெரிவு 20ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தங்களுக்கான ஆதரவு தளத்தை அதிகரிக்க ஆரம்பித்துள்ளனர். இதே வேளை நாடாளுமன்றில் அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்த பொதுஜன பெரமுன கட்சி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தன்னுடைய முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வீடுகளையும் நிர்மாணிப்பதற்கு உதவ பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொள்கை அளவில் தீர்மானம் எடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நேரில், மற்றும் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு இவ் வாக்குறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை எரித்தவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் எனவும், தமது ஆட்சியில் நாட்டில் வன்முறைகளுக்கு இடமில்லை எனவும் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் அழிக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.

கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் என சுமார் என்பதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

இதே நேரம் தற்போது பதில  ஜனாதிபதியாக செயற்பட்டு வருமா ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஓட்டுப்போடும் எம்பிக்களின் விபரங்களை இரகசியமாக பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன் , நாடாளுமன்றத்தை பாதுகாப்பதற்கான மேலதிக உத்தரவுகளையும் ரணில் பிறப்பித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *