Thursday, September 23, 2021

மன்னாரில் கண்ணிவெடியகற்றும் பணிகளில் விதவைப்பெண்கள்!

LandMine_Signவன்னியில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளில் அதிகளவான பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் கணவரை இழந்த விதவைப் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எவ்.பி செய்திச்சேவை இத்தகவலை வெளியிட்டுள்ளது. வறுமை காரணமாகவே இப்பெண்கள் ஆபத்தான இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அத்தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 04ஆம் திகதி சர்வதேச ‘நிலக்கண்ணி வெடி’ விழிப்புணர்வு International Day for Landmine Awareness and Assistance -புன்னியாமீன்

கிளிநொச்சியில் கண்ணிவெடியகற்றும் வாகனம் தட்புரண்டதில் ஆறு பெண் பணியாளர்கள் படுகாயமடைந்தனர்! 

 கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள் )

மாதம் ஒன்றுக்கு 200 டொலர்களை அவர்கள் ஊதியமாகப் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு தொழில்களை விடவும் இத்தொழில் அதிகளவு வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதாக அப்பெண்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. போரினால் வடக்கு கிழக்கில் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்துள்ளதாகவும். இளம் வயதுப் பெண்கள் பலருக்கு இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்காக  இவ்வாறான ஆபத்தான தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News:

வன்னியில் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளிலும் வெடிபொருட்களின் ஆபத்து காணப்படுகின்றது.

முன்னாள் போராளிகளை கண்ணி வெடியகற்றும் பணிகளில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

கண்ணிவெடி அகற்றும் போது பிரெஞ்சு அதிகாரி மரணம்

கண்ணிகள் அகற்றும் பணியில் வடக்கில் இராணுவம் தீவிரம் – 1100 இராணுவ பொறியியலாளர், 7 அரச சார்பற்ற நிறுவனங்கள் முழுமையாக ஈடுபாடு

வடக்கு மீள்குடியமர்வு, கண்ணி வெடியகற்றல் சீனா ரூபா 50 மில். உபகரணங்கள் அன்பளிப்பு

அவுஸ்திரேலியா நிலக்கண்ணிகளை அகற்ற தன்னியக்க இயந்திரங்கள் அன்பளிப்பு!

கண்ணிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்த மேலும் 5 நவீன இயந்திரங்கள்

கண்ணிவெடி அகற்றும் பணிக்கு 5மில்.டொலர்: யு.என்.எச்.சி.ஆர்.இணக்கம் – ஜெனீவாவில் பேச்சு

கண்ணிவெடிகளின் மேல் அப்பாவிகளை தள்ளிவிட நாம் தயாரில்லை – ஜனாதிபதி

கண்ணி அகற்றும் பணிக்கு அமெ. மேலும் நிதி உதவி – 6 மில்லியன் டொலர் நன்கொடை

கண்ணிவெடி அகற்றல்; 25 மோப்ப நாய்களுக்கு கண்டியில் பயிற்சி

கண்ணிகள் அகற்றும் பணிக்கு 500 இந்திய இராணுவத்தினர்

வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிக்கு ஜப்பான் நிதியுதவி வழங்கும் – ஜனாதிபதியிடம் யசூசி அகாஷி உறுதி

கண்ணி வெடிகளை அகற்றும் விசேட இந்திய குழுவொன்று இலங்கைக்கு வருகை

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

2 Comments

 • மாயா
  மாயா

  கண்ணி வெடியை புதைத்தவர்களை வைத்தே கண்ணி வெடியை அகற்றுவது இலகு என்று நினைத்தார்களோ தெரியாது? ஆனால் அடுத்தவர்களை நம்பி வாழ்வதை விட இது எவ்வளவொ மேல். புலத்தில் உள்ளவர்கள் வருவார்கள் தருவார்கள் என்று நினைத்து வாழ்நாள் முழுதும் செத்து செத்து வாழ்வதை விட சாவோடு போராடி வாழ்வதே மேல். ஒருவனைக் காக்க குண்டோடு செத்தவர்கள் எத்தனை பேர்? தன்னைக் காக்கவும் ; அடுத்த சந்ததி அச்சமில்லாமல் நடமாடவும் உயிரோடு விளையாடும் இந்த பெண்களுக்கு மலர் தூவி வணங்கலாம். அப்பாவிகளது பிணங்களின் மேல் அல்லது கல்லறைகள் மேல் மாடி வீடுகள் கட்டும் அரசியல் வியாபாரிகளை விட இவர்களை காவல் தெய்வங்கள் என்று அழைக்கலாம்.

  Reply
 • நந்தா
  நந்தா

  மத்திய கிழக்கில் 250 டாலருக்குப் போய் ஆணிகளுடன் வருவதிலும் பார்க்க உள்ளூரில் 200 டாலருக்கு கவுரவத்துடன் தொழில் செய்வது பாராட்டுக்குரியது.

  ஆபத்தான தொழில் என்று ஆரவாரங்கள் வரலாம். ஆயினும் “தற்கொலைக்” குண்டுதாரியாகப் போவதை விட இது நாட்டுக்கொரு நல்ல சேவையே!

  Reply