பொலிஸாரினால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ரிசாத் பதியூதீன் தெஹிவளையில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பொதுச்சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ரிசாத்தை கைது செய்ய சட்ட மா அதிபர், பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
எனினும், கைது செய்வதற்காக சில பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்ட போதும் ரிசாத் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பொலிஸாரின் தீவிர தேடுதல் நடவடிக்கை காரணமாக அவர் தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ரிசாத் பதியூதீன் தலைமறைவாக இருக்க உதவி செய்த அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிபொலிஸ்மாஅதிபர் அஜித்ரோகண கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.