இலங்கையில் தடுப்பூசி பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்ட பின்னரும் மீண்டும் தொற்றுக்கு இலக்காகிய இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இன்று வியாழக்கிழமை காலை தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார்.
குறித்த இருவரும் கேகாலை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பூசியை பெற்றகையுடன் தொற்று ஏற்படாது என்று உறுதியேற்கக்கூடாது எனத் தெரிவித்த அமைச்சர், தொடர்ந்தும் சுகாதார பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்