ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்திருந்த நிலையில் மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.
அதனை தொடர்ந்து தேசிய பட்டியலில் நாடாளுமன்றம் தெரிவாகியிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கி வைத்திருந்தார்.
ராஜபக்ஷ அரசை பாதுகாப்பிற்காகவே ரணில் விக்கிரமசிங்க பதவி ஏற்றார் என கூறி காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் நோ டீல் கம எனும் தொனியில் அலரி மாளிகையின் முன்னால் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து இதுவரை காலமும் நடாத்தி வந்த நோ டீல் கம போராட்டம் முனைப்படையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
இதன்படி அலரிமாளிகைக்கு முன்னாள் அமைக்கப்பட்டிருந்த ´நோ டீல் கம´ வை அந்த இடத்தில் இருந்து அகற்றுவதற்கு அங்குள்ள ஆர்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான இந்த போராட்டங்கள் ரணில் விக்கிரமசிங்கவின் அதிகார வெற்றிக்காக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை என குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பை தொடர்ந்து நோ டீல் கம குழுவினர் மௌனித்துள்ளமையானது ராஜபக்ஷக்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தூண்டியதன் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க உள்ளாரா என்ற சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.